ஜடேஜா பிசிசிஐ
கிரிக்கெட்

வெற்றி யாருக்கு? ஜடேஜா அரைசதம்: இங்கிலாந்துக்கு 1 விக்கெட் தேவை!

3-ஆவது டெஸ்ட்: தனியொருவனாகப் போராடும் ஜடேஜா அரைசதம்...

இணையதளச் செய்திப் பிரிவு

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற ஒரேயொரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.

3-ஆவது டெஸ்ட்டில் கடைசி நாளான இன்று(ஜூலை 14) தேநீர் இடைவேளை வரை இந்தியா 163 ரன்களை 9 விகெட் இழப்புக்கு எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 30 ரன்கள் திரட்ட வேண்டும். கைவசம் இன்னும் ஒரேயொரு விக்கெட் மட்டுமே எஞ்சியுள்ளது.

இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடித்து அணியை தனியொருவனாக கரைசேர்க்கப் போராடும் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்தார். அவர் 162 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் விளாசி களத்தில் உள்ளார். அவருடன் முகமது சிராஜ் பேட்டிங் செய்து வருகிறார்.

இங்கிலாந்து அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ப்ரைடன் கார்ஸ் 2, க்றிஸ் வோக்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

ஸ்கோர் கார்டு:

முதல் இன்னிங்ஸில்

  • இங்கிலாந்து - 387/10

  • இந்தியா - 387/10

இரண்டாவது இன்னிங்ஸில்

  • இங்கிலாந்து - 192/10

  • இந்தியா - 163/9(தேநீர் இடைவேளை வரை)

England vs India, 3rd Test - Tea Break - India need 30 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT