சதம் அடித்த மகிழ்சியில் ஹர்மன்ப்ரீத் கௌர்.  படம்: ஏபி
கிரிக்கெட்

வெற்றியை தந்தைக்குச் சமர்ப்பித்த ஹர்மன்ப்ரீத்..! ஒரே போட்டியில் பல சாதனைகள்!

இந்திய மகளிரணி கேப்டன் நிகழ்த்திய சாதனைகள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து மகளிருக்கு எதிராக இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரையும் வென்று சாதனை படைத்திருந்த நிலையில் ஒருநாள் தொடரையும் வென்று அசத்தினார்கள்.

இந்தப் போட்டியில் சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆட்டநாயகி விருதை வென்றார்.

இந்த விருதை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீராங்கனை கிராந்தி காட்டுடன் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 சதமடித்த முதல் வீராங்கனை

இங்கிலாந்தில் ஒரு வெளிநாட்டு வீராங்கனை 3 சதங்கள் அடித்தது இதுவே முதல்முறை. இந்தச் சாதனைக்கு சொந்தக்காரியாக நமது மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

4,000 ரன்கள் கடந்த 3-ஆவது இந்தியர்

ஹர்மன்ப்ரீத் கௌர் ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இவருக்கு முன்பாக மிதாலி ராஜ் 7,805 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 4,588 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

இந்தப் போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியதாவது:

அணியினர் அனைவருக்குமே இது நல்ல தருணங்களாக இருக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். டபிள்யூபிஎல் தொடரில் பெற்ற அனுபவம் கிராந்தி, ஸ்ரீ சரணிக்கு உதவின. மேலும், ஃபீல்டிங் பயிற்சியாளருக்கும் இந்த வெற்றியில் பங்கு இருக்கிறது.

இந்த வெற்றி எங்கள் அனைவருக்குமே முக்கியமானது. இந்த சிறப்பான ஆட்டத்தை நான் எனது தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் இந்த மாதிரியான ஆட்டத்துக்காக காத்திருந்தார்.

கடினமாக உழைத்தது சரியான நேரத்தில் கைகொடுத்தது. முதலில் சிறிது அழுத்தம் இருந்தது. தீப்தி முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுப்பார். உலகக் கோப்பைக்கு இந்தப் போட்டிகள் மிகவும் உதவுகின்றன என்றார்.

Indian women's team captain Harmanpreet Kaur has achieved several feats in a single match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சியினா் ஆலோசனை

கோதையாறு பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை

மேல சாத்தான்குளம் சேகரத்தில் திருமண்டல உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு

ஜூன் காலாண்டில் அதிக லாபம் கண்ட சிமென்ட் நிறுவனங்கள்

சாலை புதுபிக்கும் பணி: கனரக வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT