இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பது குறித்து கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 முதல் ஓவலில் தொடங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் ஐந்தாவது டெஸ்ட்டில் களமிறங்குகின்றன.
பும்ரா விளையாடுகிறாரா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன்பே ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனக் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால், கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கடைசி டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவது குறித்து ஷுப்மன் கில் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இருப்பதாக உணர்ந்து கடைசி டெஸ்ட்டில் விளையாட தயாராக இருந்தால், அது இந்திய அணிக்கு மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன். கடைசி டெஸ்ட்டில் அவர் விளையாடாவிட்டாலும், எங்களிடம் சரியான பந்துவீச்சு தெரிவுகள் இருக்கின்றன என்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகள் அனைத்திலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரரின் சதம்; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஷுப்மன் கில்!
Captain Shubman Gill has spoken about whether fast bowler Jasprit Bumrah will play in the 5th Test against England.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.