மார்னஸ் லபுஷேன் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி. வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் தெரிவித்துள்ளார்.

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன.

தொடக்க ஆட்டக்காரராக வேண்டும்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு, டெஸ்ட் போட்டிகளில் அந்த அணிக்கு சரியான தொடக்க ஆட்டக்காரர் இன்னும் அமையவில்லை என்றே கூறலாம்.

ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் உஸ்மான் கவாஜாவுடன் ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி முயற்சி செய்தது. இருப்பினும், அந்த முயற்சி பெரிய அளவில் பலனளிக்கவில்லை. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார்.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவதற்கு ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மார்னஸ் லபுஷேன் அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, அவருடைய ஆட்டம் நம்பமுடியாத விதமாக இருக்கும். அவருடைய சாதனைகளே அதற்கான சான்று. அவர் சதம் விளாசக் கூடியவர் மற்றும் அணிக்காக போட்டிகளை வென்று கொடுப்பவர். அவர் டாப் ஆர்டரில் களமிறங்குவார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டாலும், அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து மார்னஸ் லபுஷேனுக்கு டெஸ்ட் போட்டிகள் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. இந்த இடைவெளியில் அவர் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். கவுன்ட்டி போட்டிகளில் விளையாடி வரும் அவரது சராசரி 3 இன்னிங்ஸ்களில் வெறும் 9 ஆக உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உஸ்மான் கவாஜாவுடன் மார்னஷ் லபுஷேன் அல்லது சாம் கான்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT