முகப்பு
கிரிக்கெட்

பியூஷ் சாவ்லா ஓய்வு அறிவிப்பு!

இந்திய சுழல்பந்து வீரர் பியூஷ் சாவ்லா ஓய்வு குறித்து...

Updated On : 6 ஜூன் 2025, 3:50 pm IST
பியூஷ் சாவ்லா. - படம்: ஏபி
பகிர்:

சுழல்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.

36 வயதாகும் பியூஷ் சாவ்லா இந்தியாவிற்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகள், 7 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 192 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணியில் 2024-இல் விளையாடியிருந்தார்.

Advertisement

Advertisement

2 உலகக் கோப்பை (2007, 2011) வென்ற இந்திய அணியில் பியூஷ் சாவ்லா இருந்துள்ளார்.

இந்தியாவிற்காக கடைசியில் 2012இல் டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் சையத் முஷடக் அலி டிராபி 2024-25 தொடரில் பங்கேற்றார்.

2025 ஐபிஎல் தொடரில் விளையாடும் கனவுடன் இருந்தார். ஆனால், ஏலத்தில் அவரை யாருமே எடுக்கவில்லை. சிஎஸ்கே, கொல்கத்தா, பஞ்சாப், மும்பை அணிகளுக்குகாக விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தில் பியூஷ் சாவ்லா நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

”இந்தியாவிற்காக விளையாடியதை மறக்க முடியாது. கிரிக்கெட்டை விட்டாலும் அது எப்போதும் என்னுடன் வாழும். அடுத்தகட்ட வாழ்க்கைக்காக எதிர் நோக்கியுள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.