எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும்: பியூஸ் சாவ்லா
எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கான், 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நிதீஷ் ராணா, சமீர் ரிஸ்வி மற்றும் கேப்டன் அக்ஷர் படேல் விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தினார் ரஷித் கான். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரஷித் கான் சிறப்பாக பந்துவீசினால் அந்த போட்டி எப்படியிருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரால் எந்த ஒரு பேட்டிங் வரிசைக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அவர் முதல் பந்திலிருந்தே மிகவும் அற்புதமாக பந்துவீசினார்.
இளம் வீரர் சமீர் ரிஸ்வியை அவர் ஆட்டமிழக்கச் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடக் கூடிய சமீர் ரிஸ்வியை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்தார். மிகவும் அற்புதமாக பந்துவீசி சமீர் ரிஸ்வியின் விக்கெட்டினை அவர் வீழ்த்தினார் என்றார்.
Former Indian player Piyush Chawla has stated that any batting lineup would struggle against Rashid Khan's bowling.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.