தென்னாப்பிரிக்க அணியின் சீருடை.  படம்: எக்ஸ் / ProteasMenCSA
கிரிக்கெட்

டபிள்யூடிசியை வென்றால் எங்கள் நாட்டுக்கு திருப்புமுனை: மார்க் பௌச்சர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கூறியதாவது...

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென்றால் அது அந்நாட்டிற்கே திருப்புமுனையாக அமையுமென முன்னாள் வீரர் மார்க் பௌச்சர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஐசிசி உலகக் கோப்பையே வெல்லாத அணியாக தென்னாப்பிரிக்க ஆடவர் அணி இருக்கிறது.

தெ.ஆ. அணி பலமுறை நாக் அவுட் போட்டிகளில் வெளியேறியுள்ளன. குறிப்பாக அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் தோல்வியைச் சந்திதுள்ளது. ஆனால், 1988இல் ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபியை மட்டுமே வென்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) வெல்லும் முனைப்பில் இருக்கிறது. இதன் இறுதிப் போட்டியில் ஜூன்.11-இல் ஆஸி. உடன் மோதுகிறது.

இந்நிலையில், முன்னாள் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியதாவது:

மக்கள் தென்னாப்பிரிக்க அணியை விமர்சிக்கிறார்கள். அது நியாயமானதல்ல. நாங்கள் என்ன இருக்கிறதோ அதற்கேற்பவே விளையாடுகிறோம். எங்களுக்கு எதிராக நல்ல அணிகள் விளையாடியுள்ளன.

தற்போது, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளோம். ஆனால், இதனால் எங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமென நம்பவில்லை.

மக்கள் அதிக ஈடுபாட்டுடன் இறுதிப் போட்டியைக் காண வந்துள்ளார்கள்.

நாங்கள் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களது நாட்டில் திருப்புமுனையாக அமையும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து! செப். 12ல் பதவியேற்பு?

பற்றி எரியும் நேபாளம் - புகைப்படங்கள்

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி!

வெள்ளை நிலா... தீப்தி சதி!

SCROLL FOR NEXT