FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இங்கிலாந்தில் பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி..!

இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய அணி பயிற்சியைத் தொடங்கியது.

8 ஜூன் 2025, 11:08 am IST
இந்திய அணி பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள். - படங்கள்: பிசிசிஐ
பகிர்:

இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய அணி தனது முதல் பயிற்சியைத் தொடங்கியது.

இங்கிலாந்தில் 5 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி லண்டன் சென்றடைந்தது.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் நடைபெறவுள்ளன.

Advertisement

Advertisement

முதல் டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

ரோஹித் சர்மா, கோலி ஓய்வு பெற்றதால் ஷுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே பல வீரா்கள் இந்திய ஏ அணியில் இடம் பெற்று, 3 அதிகாரபூா்வமற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடி வருகின்றனா். 

இரண்டாம் டெஸ்ட் ஜூலை 2-6-இல் பா்மிங்ஹாமிலும், ஜூலை 10-14-இல் லாா்ட்ஸிலும், ஜூலை 23-27-இல் மான்செஸ்டரிலும், ஆக. 4-8-இல் ஓவல் திரலிலும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பயிற்சி விடியோவை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments