FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

நாளுக்கு நாள் தலைமைப் பண்பில் முன்னேற்றமடையும் பாட் கம்மின்ஸ்; முன்னாள் ஆஸி. வீரர் பாராட்டு!

பாட் கம்மின்ஸின் தலைமைப் பண்பு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

Updated On : 8 ஜூன் 2025, 5:06 pm IST
பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)
பகிர்:

பாட் கம்மின்ஸின் தலைமைப் பண்பு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது.

பாட் கம்மின்ஸுக்கு பாராட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ள நிலையில், பாட் கம்மின்ஸின் தலைமைப் பண்பு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாட் கம்மின்ஸ் அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்துகிறார். ஒவ்வொரு நாளும் அவரது தலைமைப் பண்பில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆடுகளத்துக்கு உள்ளே மட்டுமின்றி, ஆடுகளத்துக்கு வெளியேயும் அவரது தலைமைப் பண்பு சிறப்பாக உள்ளது. சர்வதேசப் போட்டிகளில் அணியை வெற்றிகரமாக வழிநடத்துவது கடினம். ஆனால், பாட் கம்மின்ஸ் அதனை சிறப்பாக செய்து வருகிறார். பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் இணைந்து அவர் அணியை நன்றாக வழிநடத்துகிறார் என்றார்.

இதுவரை ஆஸ்திரேலிய அணியை 33 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ள பாட் கம்மின்ஸ் 20 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அவரது வெற்றி சதவிகிதம் 60.60 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments