மார்னஸ் லபுஷேன் (கோப்புப் படம்) படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் மார்னஸ் லபுஷேன்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உஸ்மான் கவாஜாவுடன் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உஸ்மான் கவாஜாவுடன் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 11) முதல் லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஈடுபட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறக்கப்படுவார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு இதுவரை சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் அமையவில்லை என்றே கூறலாம். ஸ்டீவ் ஸ்மித், சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்பட்டார்கள். இருப்பினும், இவர்களில் யாரும் டேவிட் வார்னரின் இடத்தை நிரப்பியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நினைக்கவில்லை.

இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மார்னஸ் லபுஷேனுக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாய்ப்பினை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்து அணியில் இணைந்துள்ள கேமரூன் கிரீன் 3-வது வீரராக களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் 6-வது வீரராக களமிறக்கப்படவுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை லபுஷேன் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT