படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

இவரது அர்ப்பணிப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது; யாரைக் கூறுகிறார் லுங்கி இங்கிடி?

தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளருக்கு அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புகழாரம் சூட்டியுள்ளார்.

DIN

தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளருக்கு அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 11) லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. ஐசிசி கோப்பையை முதல் முறையாக வெல்லும் கனவோடு தென்னாப்பிரிக்க அணி களம் காண்கிறது.

லுங்கி இங்கிடி கூறுவதென்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், அணியில் உள்ள சக வீரரான கேசவ் மகாராஜை வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புகழ்ந்து பேசியுள்ளார்.

கேசவ் மகாராஜ் குறித்து லுங்கி இங்கிடி பேசியதாவது: வேலையில் கேசவ் மகாராஜ் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை யாராலும் ஈடுசெய்ய முடியாது என நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக முதலில் பயிற்சியைத் தொடங்கிய வீரர் அவரே. அவர் எப்போதும் அணி நிர்வாகத்துடன் முதல் நபராக பயிற்சிக்கு சென்றுவிடுவார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக நாங்கள் வந்தடைந்தபோது, அவர் கிட்டத்தட்ட 10-15 ஓவர்கள் வீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதுவே அவருடைய அர்ப்பணிப்புக்குச் சான்று. கடின உழைப்பை கொடுக்கும் வீரர் கேசவ் மகாராஜ். அவர் டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைக்க காத்திருக்கிறார். அவருடைய பெயரில் மேலும் பல சாதனைகள் எதிர்காலத்தில் வரவுள்ளன என்றார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேசவ் மகாராஜ் 198 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT