மிட்செல் ஸ்டார்க் படம் | AP
கிரிக்கெட்

தொடர்ச்சியாக 2-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது: மிட்செல் ஸ்டார்க்

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

DIN

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூன் 11) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

மிட்செல் ஸ்டார்க் கூறுவதென்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக பேசிய மிட்செல் ஸ்டார்க், இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிதாக தொடங்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், எங்களுக்கு இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் சுழற்சியில் எங்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. ஆனால், இரண்டாவது சுழற்சியில் சாம்பியன் பட்டம் வென்றோம்.

கடந்த 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் தற்போது அணியில் இடம்பெற்றுள்ளோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி லார்ட்ஸ் திடலில் மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவது முறையாக லார்ட்ஸில் சாம்பியன் பட்டம் வெல்வது சிறப்பான உணர்வைத் தரும். பல ஆண்டுகளாக அணிக்காக விளையாடி வரும் வீரர்களுக்கு மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வெல்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT