ஷுப்மன் கில்  படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நினைத்து பதற்றமாக உள்ளது: இந்திய அணியின் பயிற்சியாளர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நினைத்து சிறிது பதற்றமாக இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நினைத்து சிறிது பதற்றமாக இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.

சிறிது பதற்றமாக இருக்கிறேன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி போதிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால், இங்கிலாந்துக்கு எதிராக எப்படி செயல்படப் போகிறார்கள் என்பது குறித்து சிறிது பதற்றமாக இருக்கிறேன் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

மோர்னே மோர்க்கல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். இந்திய அணியின் பந்துவீச்சு தெரிவுகள் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் சிறந்த திறமைகளைக் கொண்டுள்ளனர். கடந்த சில நாள்களாக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும், குறைந்த அளவிலான சிவப்பு பந்து போட்டிகளில் விளையாடியுள்ளதால் சிறிது பதற்றமாகவும் இருக்கிறது.

இளம் இந்திய அணி சிறப்பாக உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும். ஒரு அணியாக வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT