டெம்பா பவுமா படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

டெம்பா என்பதன் பொருள் என்ன தெரியுமா? டெம்பா பவுமா விளக்கம்!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் பெயரில் உள்ள டெம்பா என்பதன் பொருள் குறித்து...

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், 27 ஆண்டுகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

டெம்பா என்றால் என்ன அர்த்தம்?

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனது பெயரிலுள்ள டெம்பா என்ற சொல்லுக்கு முன்பு கூறிய விளக்கம் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பவுமாவின் பாட்டி அவருக்கு டெம்பா எனப் பெயரிட்டதாக டெம்பா பவுமா முன்பு கூறியிருக்கிறார்.டெம்பா என்ற சொல்லின் அர்த்தம் நம்பிக்கை எனவும் டெம்பா பவுமா தெரிவித்திருக்கிறார். தங்களது சமூகத்தின் நம்பிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக பவுமாவிற்கு அவரது பாட்டி டெம்பா என பெயரிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுத்து டெம்பா என்ற சொல்லின் பொருளுக்கு ஏற்றாற்போல் அணிக்கு நம்பிக்கையளித்துள்ளார் கேப்டன் டெம்பா பவுமா.

21-ஆம் நூற்றாண்டில் தென்னப்பிரிக்க அணிக்காக முதல் ஐசிசி கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையும் டெம்பா பவுமாவையேச் சேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்க ராசிக்கு எப்படி?

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

தெய்வ தரிசனம்... வழக்கு விவகாரங்களில் வெற்றி தரும் திருநாவலூர் திருநாவலேஸ்வரர்!

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிரிவு தொடக்கம்

SCROLL FOR NEXT