கிரிக்கெட்

கேப்டனாக ஆதிக்கம் செலுத்தும் டெம்பா பவுமா!

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

DIN

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், 27 ஆண்டுகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தென்னாப்பிரிக்க அணி பல ஏமாற்றங்களை சந்தித்து வந்த நிலையில், அதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார் கேப்டன் டெம்பா பவுமா. தென்னாப்பிரிக்க அணிக்கு பலரும் கேப்டனாக செயல்பட்டுள்ளபோதிலும், கோப்பையை வெல்லும் கனவை பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி நனவாக்கியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், கேப்டன் டெம்பா பவுமா டெஸ்ட் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து பவுமா 10 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். அதில் 9 வெற்றிகள் மற்றும் ஒரு டிரா அடங்கும். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே காணாத கேப்டனாக அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழக அரசு

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

அதிக ரிஸ்க், அதிக பலன்... காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்!

SCROLL FOR NEXT