5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதி படங்கள்: எக்ஸ் / லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கிரிக்கெட்

5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய திக்வேஷ் ரதி..! லக்னௌ அணி உரிமையாளர் பகிர்ந்த விடியோ!

லக்னௌ அணி வீரர் திக்வேஷ் ரதி டி20 போட்டியில் அசத்தியது குறித்து...

DIN

லக்னௌ அணி வீரர் திக்வேஷ் ரதி உள்ளூர் டி20 போட்டியில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது வைரலாகி வருகிறது.

இந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ அணியில் ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி தனது சிறப்பான பந்துவீச்சினாலும் விக்கெட் எடுத்த பிறகு ’நோட்புக் செலிபிரேஷன்’ எனும் அவரது கொண்டாட்டத்தினாலும் கவனம் ஈர்த்தார்.

தொடர்ச்சியாக இந்தக் கொண்டாட்டத்தினால் அபராதம் விதிக்கப்பட்டாலும் திக்வேஷ் அஞ்சாமல் அதைச் செய்து வந்தார்.

இந்தக் கொண்டாட்டத்தினால் தனது ஊதியத்தில் 30 சதவிகிதம் அபராதமாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்த திக்வேஷ் ரதி 8.25 எகானமியுடன் பந்துவீசினார்.

உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி எடுத்த 5 விக்கெட்டுகள் விடியோவை லக்னௌ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2025இல் உள்ளூர் போட்டியில் 28 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார்.

உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி 5 பந்துகளுக்கும் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்த விடியோவை பார்த்து வியந்தேன். ஐபிஎல் 2025-இல் லக்னௌ அணியில் நட்சத்திரமாக மாறுவதற்கான சிறிய முன்னோட்டம்தான் இந்த விடியோ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT