இங்கிலாந்து டெஸ்ட் அணி.  படம்: ஐசிசி
கிரிக்கெட்

பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து: இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் குறித்து...

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி ஜூன்.20 முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தொடங்குகிறது.

இந்தத் தொடரில் முதல் போட்டிக்கான அணியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

இங்கிலாந்து அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக 2024-இல் விளையாடிய இவர் காயத்துக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார்..

கிறிஸ் ஓக்ஸுடன் மற்றுமொரு ஆல்ரவுண்டரான பிரைடன் கார்ஸும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பேட்டிங்கில் அதிரடி காட்டும் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலம்சேர்க்கும் வகையில் ஆல்ரவுண்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு சற்று பாதகமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

ஹெடிங்லே திடலில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT