கோச்சி டஸ்கர்ஸ், பிசிசிஐ இலச்சினை கோப்புப் படங்கள்.
கிரிக்கெட்

கொச்சி அணிக்கு பிசிசிஐ ரூ.538 கோடி இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு பிசிசிஐ நிர்வாகம் இழப்பீடு வழங்குவது குறித்து...

DIN

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு இழப்பீடாக பிசிசிஐ நிர்வாகம் ரூ.538 கோடி வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிசிசிஐயின் நடவடிக்கையை எதிர்த்து நடுவர் தீர்ப்பாயத்தில் கொச்சி டஸ்கர்ஸ் அணி வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ரூ.538 கோடியை கொச்சி அணிக்கு பிசிசிஐ வழங்க வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்எஸ்டபிள்யூ 2011ஆம் ஆண்டு ஜெயவர்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை உருவாக்கியது.

என்ன பிரச்னை?

ஒப்பந்தப்படி வங்கி உத்தரவாதம் அளிக்காததால் 2012-இல் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை பிசிசிஐ நிர்வாகம் நீக்கியது.

இதை எதிர்த்து ஆர்எஸ்டபிள்யூ வழக்கு தொடர்ந்தது. அதில் இழப்பீடாக ரூ.555 கோடி வழங்க வேண்டுமென வழக்கு தொடரப்பட்டது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிர்வாகமாக இருக்கும் பிசிசிஐ-க்கு ரூ. 538 கோடி இழப்பீடு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிசிசிஐ இதுவரை எந்த தகவலையும் தரவில்லை. மேல்முறையீடு செய்கிறதா அல்லது இழப்பீடு தருகிறதா என்பது குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

SCROLL FOR NEXT