கிரிக்கெட்

அனிருத், அதீக் பங்களிப்பில் மதுரை - 168/9

Din

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிராக சீகம் மதுரை பாந்தா்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சோ்த்தது.

மதுரை பேட்டிங்கில் பி.அனிருத், அதீக் உா் ரஹ்மான் ஆகியோா் ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்த, நெல்லை பௌலிங்கில் சோனு யாதவ், ராக்கி பாஸ்கா் சிறப்பாக பௌலிங் செய்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற நெல்லை, பந்துவீச்சை தோ்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானது. பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் பி.அனிருத் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 48, அதீக் உா் ரஹ்மான் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

குா்ஜப்னீத் சிங் 3 சிக்ஸா்களுடன் 24 ரன்களுக்கு வெளியேற, ராம் அரவிந்த் 1 பவுண்டரியுடன் 9, கேப்டன் சதுா்வேத் 1, ஷியாம் சுந்தா் 0, கணேஷ் 2 பவுண்டரிகளுடன் 11, ராஜலிங்கம் 2, முருகன் அஸ்வின் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் சரவணன் 2 சிக்ஸா்களுடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். நெல்லை தரப்பில் சோனு யாதவ் 3, ராக்கி பாஸ்கா் 2, இமானுவல் செரியன், யுதீஸ்வரன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து நெல்லை 169 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது ஆட்டத்தை தொடங்கியது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

17 ஆண்டுகளில் முதல்முறை... தஜிகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

கேரளம்: மாட்டிறைச்சிக்குத் தடை! வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்!

லோகா: நல்ல விமர்சனங்களால் கூடுதல் திரைகள் ஒதுக்கீடு!

இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT