முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் சாய் சுதர்சனுக்கு முன்பாக அபிமன்யூவிற்கு வாய்ப்பு அளியுங்கள் எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.
முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் யாரை களமிறக்குவது என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
முதல் டெஸ்ட்டில் நம்.4-இல் ஷுப்ம்ன கில், நம்.5-இல் ரிஷப் பந்த் களமிறங்க உள்ளதாக இந்திய அணி முடிவெடுத்துளது.
சாய் சுதர்சன் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடியதால் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.
ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகள் அசத்திய வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
சாய் சுதர்சனுக்கு முன்பாக பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அபிமன்யூ ஈஸ்வரனுக்கு முழு தகுதி இருக்கிறது. முதல்தர போட்டிகளில் கிட்டதட்ட 8 ஆயிரம் ரன்கள் அடித்திருப்பதை மதிக்க வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஏ அணியில் ரன்கள் குவித்த சர்ஃபராஸ் கானை தேர்வுசெய்யாமல் தேர்வுக்குழுவினர் தவறிழைத்துள்ளனர். அதேபோல் அபிமன்யூ ஈஸ்வரனையும் விலக்கி வைத்து தவறிழைக்கக் கூடாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.