இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களும் எடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும், கேல்.எல்.ராகுல் 42 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிரைடான் கார்ஸ் மற்றும் சோயப் பஷீர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பும்ரா 5 விக்கெட்டுகள்; இங்கிலாந்து 465/10
இந்தியாவைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆலி போப் 101 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஹாரி ப்ரூக் 99 ரன்கள், பென் டக்கெட் 62 ரன்கள், ஜேமி ஸ்மித் 40 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம்: பென் டக்கெட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.