சௌரவ் கங்குலி (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

என்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது; சௌரவ் கங்குலி வருத்தம்!

தன்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

DIN

தன்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18, 575 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என அவர் மொத்தமாக 38 சதங்கள் விளாசியுள்ளார்.

இந்த நிலையில், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு சதங்களை தவறவிட்டு விட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிடிஐ நிறுவனத்தின் கலந்துரையாடலில் அவர் பேசியதாவது: நான் நிறைய சதங்களை தவறவிட்டு விட்டேன். அந்த சதங்களை எல்லாம் நான் அடித்திருக்க வேண்டும். நிறைய முறை 90+ ரன்கள் மற்றும் 80+ ரன்களில் ஆட்டமிழந்துள்ளேன். நான் தனியாக இருக்கும்போது, என்னுடைய பேட்டிங் விடியோக்களை பார்ப்பேன். என்னுடைய மனைவி இல்லாதபோது, நான் யூடியூபில் சென்று என்னுடைய பழைய பேட்டிங் விடியோக்களைப் பார்த்து, இந்தப் போட்டியில் சதம் அடித்திருக்க வேண்டும் எனக் கூறிக் கொள்வேன். ஆனால், கடந்த காலத்தை மாற்ற முடியாது என்றார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 90+ ரன்கள் மற்றும் 80+ ரன்களில் சௌரவ் கங்குலி, 30 முறை ஆட்டமிழந்துள்ளார். அந்தப் போட்டிகளில் எல்லாம் கங்குலி சதம் விளாசியிருந்தால், அவர் தற்போது சர்வதேசப் போட்டிகளில் 50-க்கும் அதிகமான சதங்களுக்கு சொந்தக்காரராக இருந்திருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்

ஸ்பிக் நிகர லாபம் ரூ.66.71 கோடியாக உயர்வு!

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

SCROLL FOR NEXT