சாய் ஹோப் படம் | AP
கிரிக்கெட்

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் நிதானம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பார்படாஸில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 78 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, உஸ்மான் கவாஜா 47 ரன்களும், பாட் கம்மின்ஸ் 28 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

மேற்கிந்தியத் தீவுகள் - 135/5

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது, மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கிரைக் பிரத்வெயிட் 4 ரன்கள், ஜான் கேம்பெல் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கீஸி கார்ட்டி 20 ரன்கள் மற்றும் பிரண்டன் கிங் 26 ரன்கள் எடுத்தனர். ஜோமெல் வாரிக்கேன் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ராஸ்டன் சேஸ் 44 ரன்களுடனும், சாய் ஹோப் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 45 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

நயன்தாராவின் போலீஸ் அவதாரம்! டியர் ஸ்டூடன்ஸ் டீசர்!

பிபாஷா பாசுவை உருவ கேலி செய்தது ஏன்? மன்னிப்பு கேட்ட மிருணாள் தாக்குர்!

முதுமலையில் யானைகளோடு சுதந்திர தினம் கொண்டாடிய அதிகாரிகள்!

SCROLL FOR NEXT