சர்ச்சையான டிராவிஸ் ஹெட்டின் கேட்ச். படங்கள்: எக்ஸ் / ஃபேன்கோட்
கிரிக்கெட்

சர்ச்சையான டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்: நடுவரின் முடிவு சரியா? தவறா?

முதல் டெஸ்ட்டில் ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட்டின் கேட்ச் சர்ச்சையானது குறித்து...

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சுக்கு நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மே.இ.தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட்டில் விளையாடும்போது இந்த சம்பவம் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் 45.2ஆவது பந்தில் ஷமர் ஜோசப் பந்து வீசும்போது டிராவிஸ் ஹெட் பேட்டினை வீசுவார். பந்து பேட்டில் உரசி கீப்பரிடம் செல்லும்.

கீப்பரும் பந்தினை பிடிப்பார். ஆனால், அவருக்கு அது உறுதியாக கேட்ச் தானா என்ற குழப்பம் இருந்தது. பந்து கீப்பரின் கைக்குள் செல்வதற்கு முன்பு தரையில் பட்டதா, இல்லையா என சந்தேகம் எழவே, கள நடுவர் மூன்றாம் நடுவரிடம் சென்றார்.

ரீப்பிளேவில் பார்க்கும்போது பேட்டில் பட்டது உறுதியாகியது. அடுத்தாக, கீப்பரிடம் செல்லும்போது தரையில் பட்டதா என்பது சரியாகத் தெரியவில்லை. பின்னர், நாட் அவுட் எனக் கொடுக்கப்பட்டது.

இது குறித்து பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். எளிமையான விக்கெட்டை நடுவர் தரவில்லை எனவும் டிராவிஸ் ஹெட்டுக்கு அதிர்ஷடம் என்றும் கூறினார்கள்.

ஷமர் ஜோசப் இந்த விக்கெட்டை கைப்பற்றியிருந்தால் 5 விக்கெட்டுகள் ஆகியிருக்கும். அது தவறவிடப்பட்டது.

டிராவிஸ் ஹெட் அடுத்து சில ஓவர்களில் ஆட்டமிழந்தார். 180-க்கு ஆஸி. அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மே.இ.தீ. அணி முதல் நாள் முடிவில் 57/4 ரன்கள் எடுத்துள்ளது.

Summary

Third umpire Holdstock took his time, but surprisingly, declared Travis Head not out, stating that there was no conclusive evidence of a clean catch in west indies australia First Test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT