இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உ.பி. மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 வயதாகும் ரிங்கு சிங் ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து புகழ்பெற்றார். பின்னர், இந்திய அணிக்கும் தேர்வானார்.
சமீபத்தில், சமாஜவாதி கட்சியின் இளம் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்தமாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பின்னர், கிரிக்கெட் தேதிகளால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உ.பி. அரசாங்கள் ரிங்கு சிங்கை கௌரவிக்கும் பொருட்டு 2022 விதியின்படி அவரை மாவட்ட கல்வி அதிகாரியாக நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினரை திருமணம் செய்தாலும் பாஜக அரசு அவருக்கு பதவி வழங்குவது பாராட்டைப் பெற்று வருகிறது.
ரிங்கு சிங் 9-ஆவது வகுப்பின் பாதியிலேயே பள்ளிப் படிப்பை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதவிக்காக சிலர் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என ரிங்குவை விமர்சித்தும் வருகிறார்கள். சிலர், அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த வென்றும் கூறி வருகிறார்கள்.
Summary
Rinku has now received a government appointment from the Yogi Adityanath-led Uttar Pradesh government. The cricketer has been named Basic Education Officer (BSA) under direct recruitment rules.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.