படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா நிதானம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூன் 28) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான டோனி டி ஸார்ஸி 0 ரன்னும், மேத்யூ ப்ரீட்ஸ்க் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வியான் முல்டர் 17 ரன்கள், டேவிட் பெடிங்ஹம் 0 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர். லுஹான் பிரிடோரியஸ் 44 ரன்களுடனும், டெவால் பிரீவிஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஜிம்பாப்வே தரப்பில் தனாகா சிவங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

summary

South Africa were 90 for 4 at the lunch break in the first innings of the first Test against Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

SCROLL FOR NEXT