கிரிக்கெட்

நியூஸி. தொடர்: பாகிஸ்தான் அணியிலிருந்து ரிஸ்வான், பாபர் அசாம் நீக்கம்!

நியூஸி. டி20 தொடர்: முக்கிய வீரர்களை நீக்கிய பாகிஸ்தான் அணி..

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் முக்கிய வீரர்களான கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். டி20 அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் சல்மான் அலி அகாவும், துணைக் கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் சொந்த மண்ணில் நடந்த போட்டியிலேயே ஒரு வெற்றிகூட பெறாமல் வெளியேறியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இதனால் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்கிறார்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?

இருப்பினும், பாபர் அசாம் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில் சௌத் சாகீல், கம்ரான் குலாம் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர்த்து சாகீன் ஷா அப்ரிடி, ஹாரீஸ் ராஃப் இருவரும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அணி மார்ச் 16 ஆம் தேதி தொடங்கும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான்(கேப்டன்), சல்மான் அலி அகா, அப்துல்லா சாஃபீக், அப்ரார் அகமது, அகீஃப் ஜவேத், பாபர் அசாம், ஃபஹீம் அஸ்ராஃப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், முகமது இர்ஃபான் கான், நசீம் ஷா, சுஃப்யான் முகீம், தயாப் தாஹீர்.

டி20 அணி: சல்மான் அலி அகா(கேப்டன்), சதாப் கான், அப்துல் சமத், அப்ரார், ஹாரீஸ் ராஃப், ஹசன் நவாஸ், ஜஹாந்தத் கான், குஷ்தில் ஷா, முகமது அபாஸ், முகமது அலி, முகமது ஹரிஸ், முகமது இர்பான் கான், ஒமைர் பின் யூசுப், ஷாகீன் ஷா, சுஃப்யான் முகீம், உஸ்மான் கான்.

இதையும் படிக்க: இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT