ஸ்டீவ் ஸ்மித்... 
கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு..

DIN

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரும் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், அவரது ரசிகர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் அதிரடியாக விளையாடிய ஸ்மித் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிக்க 'தி கிரேட்டஸ்ட்' ஸ்டீவ் ஸ்மித்தின் புத்துயிர்ப்பு!

முன்னணி வீரர்கள் கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், மார்ஷ் ஆகியோர் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. இந்த நிலையில் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதான ஸ்டீவ் ஸ்மித் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 170 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களுடன் 5,800 ரன்களைக் குவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு 164 ரன்கள் குவித்தது இவரது அதிகபட்சமாகும். லெக்ஸ்பின்னராக கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

போதை மாத்திரை விற்ற மூவா் கைது

இளைஞா் கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT