ரோஹித் சர்மா படம் | AP
கிரிக்கெட்

இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா செய்ய வேண்டியதென்ன? முன்னாள் கேப்டன் பதில்!

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன்கள் குவிப்பதை இலக்காக கொண்டு விளையாட வேண்டும்.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன்கள் குவிப்பதை இலக்காக கொண்டு விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர்.

25-30 ரன்களில் திருப்தி கூடாது

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 25-30 ரன்கள் எடுத்து அணிக்கு தொடக்கம் அமைத்துக் கொடுத்தால் போதும் என ரோஹித் சர்மா நினைக்கக் கூடாது. பெரிய இன்னிங்ஸ் விளையாடி அதிக அளவில் ரன்கள் குவிப்பதை அவர் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 25 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தால், அணியின் ஸ்கோர் 180-200 ரன்களாக இருக்கும். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அவ்வாறு செய்தால், இந்திய அணியால் 350 அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்களை குவிக்க முடியும். ரோஹித் சர்மா அவரது விக்கெட்டினை இழக்காமல் பெரிய இன்னிங்ஸ் விளையாடினால், அவரால் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக மாற்ற முடியும்.

ஒரு பேட்ஸ்மேனாக 25-30 ரன்கள் எடுத்துவிட்டு திருப்தியடைய முடியுமா? 25-30 ரன்கள் எடுத்துவிட்டு உங்களது மனம் திருப்தியடையக் கூடாது. நீங்கள் 8 அல்லது 9 ஓவர்களில் ஆட்டமிழக்காமல், 25 ஓவர்கள் மற்றும் அதற்கும் மேலான ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடினால், உங்களால் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அதிரடியான தொடக்கத்தை கொடுக்கிறார். ஆனால், அதிரடியாக விளையாடும்போது அடிக்கடி குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார். இந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் 41 ரன்கள் எடுத்ததே, இந்த தொடரில் அவரது அதிகபட்ச ரன்கள் ஆகும்.

பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக ரோஹித் சர்மா 20, 15, 18 ரன்கள் முறையே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT