படம் | ஐசிசி
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி 2025: சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி இன்று (மார்ச் 10) அறிவித்துள்ளது.

DIN

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி இன்று (மார்ச் 10) அறிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி கைப்பற்றியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி இன்று (மார்ச் 10) அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியில் இந்திய அணியிலிருந்து 6 பேர் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியிலிருந்து 4 பேரும், ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணி விவரம்

ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் ஸத்ரான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கிளன் பிலிப்ஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), முகமது ஷமி, மாட் ஹென்றி, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்‌ஷர் படேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT