ஹார்திக் பாண்டியா படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்.
கிரிக்கெட்

ஐபிஎல் 2025: மும்பை அணியில் இணைந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அணியில் இணைந்தார்.

DIN

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கையோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அதன் அணியில் இணைந்தார்.

துபையில் நடந்துமுடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று அசத்தியது.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணியில் விளையாடும் ஒவ்வொருவரும் தங்களது சொந்த அணிக்கு திரும்பி வருகிறார்கள்.

ஹார்திக் பாண்டியா அணியில் இணைந்ததை குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி, “துப்பாக்கி வந்தடைந்தது” எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். ரோஹித்துக்கு பதிலாக நியமிக்கப்பட்டதால் ரசிகர்கள் அவரை மிகவும் கேலி செய்தார்கள்.

கடந்த முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் சென்ற மும்பை அணி இந்தமுறை 6ஆவது கோப்பையை வெற்றிபெறும் முனைப்பில் இருக்கிறது.

ஆல்-ரவுண்டரான ஹார்திக் பாண்டியா பேட்டிங்கில் நம்.7இல் களமிறங்குவார், வேகப் பந்துவீச்சிலும் அசத்துவார்.

மும்பையின் முதல் போட்டி வரும் மார்ச்.23ஆம் தேதி சிஎஸ்கேவுடன் மோதவிருக்கிறது. முதல் போட்டியில் பாண்டியா விளையாடமாட்டார். கடந்தாண்டு மெதுவாக பந்துவீசியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT