கிரிக்கெட்

புலிகளின் புலி: தில்லி கேப்டனாக அக்‌ஷர் படேல்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு தில்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் இருந்தார். ஏலத்தில் அவர் லக்னௌ அணிக்கும் கே.எல்.ராகுல் தில்லி அணிக்கும் வாங்கப்பட்டார்கள்.

கே.எல்.ராகுல் வெறுமனே பேட்டராக விளையாடுவாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை தில்லி கேபிடல்ஸ் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தில்லி கேபிடல்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “புலிகளின் புலி” என வர்ணித்து அக்‌ஷர் படேலை கேப்டனாக அறிமுகப்படுத்தியுள்ளது.

31 வயதாகும் அக்‌ஷர் படேல் 6 சீசனாக அணியில் இருக்கிறார். ரூ.16 கோடிக்கு அவரை தில்லி தக்கவைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தில்லிக்காக 82 ஐபிஎல் போட்டிகளில் 967 ரன்கள், 62 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் குஜராத் அணிக்கு தலைமை வகித்திருந்தார். மேலும், இந்தியாவின் டி20 அணிக்கு துணை கேப்டனாக இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநா் எஸ்.என்.சக்திவேல் காலமானா்

பரிசுத்தம்... அவந்திகா மிஸ்ரா!

வசியக்காரி... சோனம் பஜ்வா!

பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்

SCROLL FOR NEXT