ஆஸி.யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி படம்: எக்ஸ் / ஆல் இந்திய ரேடியோ.
கிரிக்கெட்

ஆஸி.யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது.

DIN

இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது.

நேற்றிரவு நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 220/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக யுவராஜ் சிங் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

94 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மாஸ்டர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி சார்பில் 4 விக்கெட்டுகள் எடுத்த ஷபாஸ் நதீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மற்றுமொரு அரையிறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி, மே.இ.தீ. மாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது.

இதில் வெற்றுபெறுவர்களுடன் இந்திய மாஸ்டர்ஸ் அணி இறுதிப் போட்டியில் மார்ச்.16ஆம் தேதி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT