கபில் தேவ் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

வெளிநாட்டுத் தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்

வெளிநாட்டுப் பயணங்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பதை கபில் தேவ் ஆதரித்து பேசியுள்ளார்.

DIN

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் வெளிநாட்டுப் பயணங்களில் குடும்பங்கள் வீரர்களுடன் பயணிப்பதை ஆதரித்து பேசியுள்ளார்.

பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலும் புதிதாக கட்டுப்பாடுகளை பிசிசிஐ சமீபத்தில் விதித்தது.

தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பரிந்துரை அடிப்படையிலான உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாடுவது, போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் போது குடும்பத்தினருக்கு குறைந்த நாட்களே அனுமதி போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது

விராட் கோலி பிசிசிஐ-க்கு மறுப்பு தெரிவித்து குடும்பங்கள் உடன் இருக்க வேண்டுமெனக் கூறினார். தற்போது கபில் தேவும் அதை வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் கபில் தேவ் பேசியதாவது:

அது பிசிசிஐ-இன் முடிவு. ஆனால், எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது.

முதல்பாதியில் கிரிக்கெட்டுக்கும் இரண்டாம் பாதியில் குடும்பத்துக்கும் முக்கியத்துவம் என எங்களது காலத்தில் நாங்களே முடிவெடுப்போம்.

அது கண்டிப்பாக இரண்டும் கலந்திருக்க வேண்டும். அப்போது பிசிசிஐ எங்களுக்கு எதுவும் மாற்றாகக் கூறாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு மாத கால தூய்மை இயக்கத்தை தொடங்கியது தில்லி அரசு

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு!

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

SCROLL FOR NEXT