ரோஹித் சர்மா படம்: ஏபி
கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு..! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.

கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என ஆஸ்திரேலியாவுடன் தோல்வியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதங்கள், 18 அரைசதங்களும் அடங்கும்.

சமீபத்தில் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது இன்ஸ்டா பதிவில் ரோஹித் சர்மா கூறியதாவது:

நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்கிறேன். வெள்ளை நிற ஜெர்ஸியில் இந்தியாவுக்காக விளையாடியது எப்போதும் பெருமையானது.

இவ்வளவு ஆண்டுகளாக எனக்குக் கிடைத்த அன்பு, ஆதரவுக்கு நன்றிகள். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்துடன் வரும் ஜூன் மாதம் டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்கு முன்பாக ரோஹித் சர்மா எடுத்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோஹித் சர்மாவின் பதிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT