ராவல்பிண்டி திடல் அருகே ட்ரோன் தாக்குதல்.. 
கிரிக்கெட்

ராவல்பிண்டி திடல் அருகே ட்ரோன் தாக்குதல்! பிஎஸ்எல் போட்டிகள் லாகூருக்கு மாற்றம்!

ராவல்பிண்டி கிரிக்கெட் திடல் அருகில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதைப் பற்றி...

DIN

பாகிஸ்தானில் ராவல்பிண்டி கிரிக்கெட் திடல் அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின்பேரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையத்திற்கு அருகில் வியாழக்கிழமை காலை ட்ரோன் தாக்குதல் நடந்ததாகத் தகவல் தெரிவிக்கின்றன.

கோபால் நகர், நசீராபாத் சுற்றுப்புறங்களில் வெடி சப்தத்துடன் புகைமூட்டம் கிளம்பும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதேவேளையில் காலை ராவல்பிண்டி கிரிக்கெட் திடல் அருகில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அங்கிருந்த அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

கண்காணிப்புக்காக இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதா? என காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். திடலுக்கு அருகில் இருந்த கடைகள், வணிக வளாகங்கள் முழுமையாக சேதமடைந்தன.

இந்த நிலையில், அந்தப் பகுதி முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காயமுற்றோர் உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ட்ரோன் தாக்குதலுக்கான விடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இன்று இரவு நடைபெறும் பெஷாவர் ஸால்மி - கராச்சி கிங்ஸ் இடையிலான போட்டி லாகூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீரர்களை உடனே வெளியே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: போர்ப் பதற்றம்: பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT