ரோஹித் சர்மா (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

DIN

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 7) அறிவித்தார். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை யார் கேப்டனாக வழிநடத்தப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் போன்றோர் பிராதன போட்டியாளர்களாக உள்ளனர். இருப்பினும், அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து இறுதி முடிவு பிசிசிஐ-ன் கைகளில் உள்ளது.

டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் யார் இருக்கிறார்கள் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்ததாவது: இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை தேர்வுக் குழு உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள். இது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை அறிவிப்பார்கள். இது முழுக்க முழுக்க அவர்களின் முடிவாகவே இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!

“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு

ராகுலுக்கு ஒரு வாரம் கெடு..! வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் உறுதிமொழி பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT