கோப்புப்படம்  
கிரிக்கெட்

பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள் அரபு அமீரகத்துக்கு மாற்றம்!

பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள் மாற்றப்பட்டிருப்பது பற்றி...

DIN

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கு வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின்பேரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர்ச் சூழல் எழுந்துள்ளது. இரு நாட்டுப் படைகளும் எல்லையோர மாநிலங்களில் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூர் மைதானங்களில் நடைபெறவிருக்கும் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் போட்டிக்கான மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

SCROLL FOR NEXT