முகப்பு
கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாக். சூப்பர் லீக் ஒத்திவைப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாக். சூப்பர் லீக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 10 மே 2025, 11:22 am IST
பாக். சூப்பர் லீக்..
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. மேலும், இந்திய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில், ராவல்பிண்டி கிரிக்கெட் திடலுக்கு அருகில் இருந்த கட்டடங்கள், கடைகள், வணிக வளாகங்கள் கடுமையாக சேதமடைந்தன.

Advertisement

Advertisement

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கிருந்தும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி வெள்ளிக்கிழமை, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தது, போர்ப் பதற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்றி, இந்தத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.