மைக்கேல் கிளார்க், ரோஹித் சர்மா.  படம்: இன்ஸ்டா / மைக்கேல் கிளார்க்.
கிரிக்கெட்

கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்

டெஸ்ட்டில் ஓய்வுபெற்ற ரோஹித் சர்மா குறித்து மைக்கேல் கிளார்க் பேசியதாவது...

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக மே.7ஆம் தேதி அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என ஆஸ்திரேலியாவுடன் தோல்வியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதங்கள், 18 அரைசதங்களும் அடங்கும்.

இவர் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது:

ரோஹித் சர்மாவின் இழப்பை இந்தியா எப்படி சமாளிக்கும்?

ரோஹித் சர்மா மாதிரியான ஒரு வீரரை எந்த ஒரு அணியும் மிஸ் செய்யும். ஆனால், புத்திசாலிதனமான ஒரு கேப்டனாக அவரை யாருமே ஈடுசெய்ய முடியாது. ரோஹித் சர்மா போட்டியை சிறப்பாக கவனிப்பார் என்றார்.

ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கே.எல்.ராகுலை தொடக்க வீரராக களமிறக்கலாம். ஆனால், கேப்டனாக அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா ஏற்கனவே கேப்டனாக அசத்தியிருந்தாலும் நீண்டகால நோக்கில் ஷுப்மன் கில் கேப்டனாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டுக்கொருவர் ஐ.ஏ.எஸ். அலுவலர்!

ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்

அமெரிக்க வரி ஏதிரொலி: நிவாரணம் நாடும் ரத்தின மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள்!

மிடுக்கு... அஸ்வதி!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

SCROLL FOR NEXT