டிம் சௌதி மற்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதி நியமனம்!

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடையும் வரை நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதியை, இங்கிலாந்து அணியின் சிறப்பு ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 15) நியமித்துள்ளது.

நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள டிம் சௌதி, கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடுத்த வாரம் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது. அந்த போட்டியிலிருந்து டிம் சௌதி இங்கிலாந்து அணியுடன் இணையவுள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டிம் சௌதியின் பரந்த அனுபவம் மற்றும் உலகின் பல்வேறு ஆடுகளங்களிலும் விளையாடியுள்ள அனுபவம் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு உதவியாக இருக்கும். இங்கிலாந்து அணியின் சிறப்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 வயதாகும் டிம் சௌதி நியூசிலாந்து அணிக்காக 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 391 விக்கெட்டுகளையும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 221 விக்கெட்டுகளையும், 126 டி20 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!

SCROLL FOR NEXT