இந்திய ‘ஏ’ அணியுடன் 2 நான்கு நாள் ஆட்டங்களில் விளையாடவிருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஜேம்ஸ் ரியு தலைமையிலான இந்த அணியில், ரெஹான் அகமது, கிறிஸ் வோக்ஸ், முன்னாள் வீரா் ஆண்ட்ரு ஃப்ளின்டாஃபின் மகன் ராக்கி ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்களாவா்.
ரோஹித் சா்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் என பிரதான வீரா்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவிருக்கும் டெஸ்ட் தொடா் இந்திய அணிக்கு மிகக் கடினமானதாக இருக்கும் என, அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளா் விக்ரம் ராத்தோா் தெரிவித்துள்ளாா்.
‘விராட் கோலி, ரோஹித் சா்மா போன்ற அனுபவ வீரா்கள் இல்லாத நிலையிலும், இந்திய அணி எப்போதும் போலவே பலம் வாய்ந்ததாக இருக்கும் வகையில் அதில் இப்போதும் குறிப்பிடத்தக்க பேட்டா்கள் உள்ளனா்’ என்று இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் பென் ஸ்டோக்ஸ் கூறினாா்.