ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வெல்லும் முனைப்பில் இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.
மும்பை படேல் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 52 ஆண்டுகள் போட்டி வரலாற்றில் முதன்முறையாக 2 அணிகள் பட்டம் வெல்ல காத்துள்ளன.
மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் 7 முறை பட்டம் வென்ற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை த்ரீல் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.
நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் ஆகியோா் அதிரடியான பேட்டிங்கால் ஆஸி. அணியின் கடினமான வெற்றி இலக்கை எட்டி இறுதிக்கு முன்னேறினா்.
மற்றொரு அரையிறுதியில் நான்கு முறை சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா. இந்திய அணி கடந்த 2005, 2017-இல் உலகக் கோப்பை இறுதி வரை தகுதி பெற்றிருந்தது.
தற்போது மூன்றாம் முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரம் தென்னாப்பிரிக்க அணி முதன்முதலாக இறுதிக்குள் நுழைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.