உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
“வருங்கால சந்ததிகளுக்கு உத்வேகமாக இருப்பீர்கள், உங்கள் துணிச்சலான கிரிக்கெட் மற்றும் தொடர்ந்து நம்பிக்கையால் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.
நீங்கள் அனைவரும் அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள், இந்த தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள். ஹர்மன் மற்றும் அணிக்கு பாராட்டுகள். ஜெய் ஹிந்த்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.