தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் - இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. 
கிரிக்கெட்

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கோப்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைந்தது. இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி முதல்முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

அதிரடியாக ஆடி கடைசிவரைப் போராடிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் எடுத்தும், அவரது அணிக்கு பலனளிக்கவில்லை.

இறுதிப்போட்டி மட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அதிரடி ஆட்டத்தைக் காண்பித்த லாரா வோல்வார்ட் 167 ரன்கள் குவித்திருந்தார். மேலும், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மட்டும் 571 ரன்களைக் குவித்து புதிய சாதனையும் படைத்தார்.

இந்த நிலையில், ஐசிசி மகளிருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் தனது அதிரடியைக்காட்டிய லாரா வோல்வார்ட், 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவைப் பின்னுக்குத்தள்ளி முதல் முறையாக தனது சிறந்த தரநிலையுடன் முதலிடத்துக்கு லாரா வோல்வார்ட் முன்னேறியுள்ளார். ஸ்மிருதி ஒரு இடம் சரிந்து 811 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய நிர்ணயித்த 339 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து 127 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக 9 இடங்கள் முன்னேறி 658 புள்ளிகளுடன் 10 இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி 3 இடங்கள் முன்னேறி நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டிவைனுடன் 7 இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை

  1. லாரா வோல்வார்ட் - 814 புள்ளிகள்

  2. ஸ்மிருதி மந்தனா - 811 புள்ளிகள்

  3. அஷ்லெய் கார்ட்னர் - 738 புள்ளிகள்

  4. நாட் ஷிவர் ப்ரண்ட் - 714 புள்ளிகள்

  5. பெத் மூனி - 700 புள்ளிகள்

  6. அலீசா ஹீலி - 688 புள்ளிகள்

  7. சோஃபி டிவைன் - 669 புள்ளிகள்

  8. எல்லீஸ் பெர்ரி - 669 புள்ளிகள்

  9. ஹேலே மேத்யூஸ்-663 புள்ளிகள்

  10. ஜெமிமா ரோட்ரிக்ஸ் - 658 புள்ளிகள்

Smriti Mandhana dethroned, Laura Wolvaardt takes top spot in Women's ODI rankings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT