தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வருகிற 14 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி குவாஹாட்டியில் 22 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, இந்தியா ஏ அணியின் தென்னாப்பிரிக்கா ஏ அணியினருடன் மூன்று ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன.
இந்தத் தொடருக்கான மூன்று போட்டிகளும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகின்றன. இந்தத் தொடரில் முதல் போட்டி நவ.13 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
இந்தத் தொடருக்கான 14 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கேப்டனாக திலக் வர்மாவும், துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் முன்னாள் கேப்டன்களுமான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
ஒருநாள் போட்டிக்கான இந்தியா ஏ அணி
திலக் வர்மா(கேப்டன்)
ருதுராஜ் கெய்க்வாட்
அபிஷேக் சர்மா
ரியான் பராக்
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
ஆயுஷ் பதோனி
நிஷாந்த் சிந்து
விப்ராஜ் நிகம்
மனவ் சுதர்
ஹர்ஷித் ராணா
அர்ஷ்தீப் சிங்
பிரசித் கிருஷ்ணா
கலீல் அகமது
பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.