படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

4-வது டி20: ஆஸ்திரேலியாவுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அபிஷேக் சர்மா 28 ரன்கள், ஷிவம் துபே 22 ரன்கள், அக்‌ஷர் படேல் 21 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 20 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சேவியர் பார்ட்லெட் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

Batting first in the fourth T20I against Australia, the Indian team scored 167 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்! 10 கோடி பேர் அவதி! அடுத்து என்ன?

நேபாளத்துக்கு எதிராக இத்தாலி பந்துவீச்சு..! முதல் வெற்றியைப் பெறப்போவது யார்?

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

டி20 உலகக் கோப்பை 2026-ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இலங்கை!

ஜெமினி, சாட்ஜிபிடியை முந்தும் இந்தியாவுக்கான பிரத்யேக செய்யறிவு தளம் சர்வம் AI

SCROLL FOR NEXT