ஆஷஸ் தொடரினை முன்னிட்டு ஆஸி. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்யும் விதமாக இருக்கின்றன.
ஐந்து ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் வரும் நவ.21 முதல் தொடங்கி ஜன. 12 வரை நடைபெற இருக்கின்றன.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்தத் தொடரில் அதிகமான ஆஸி. 34 தொடரினையும் இங்கிலாந்து 32 தொடரினையும் வென்றுள்ளன.
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தோல்வியுற்றுவரும் இங்கிலாந்து இந்தமுறை தனது பேஸ்பால் யுக்தியினால் மாற்றி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆஸி. ஊடகங்கள் எப்போதுமே கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் ஒன்றாகவே இருக்கின்றன.
எதிரணியினர் மட்டுமில்லாமல் சொந்த நாட்டு வீரர்களையும் கிண்டல் செய்யும் போக்காக ஆஸி. ஊடகங்கள் இதைச் செய்து வருகின்றன.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீசமாட்டார் என்பதால் நோ பால்ஸ் (No Balls) என தலைப்புச் செய்தியாக தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சியாக பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்யும் விதமாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பிஜிடி தொடரில் இந்திய வீரர் விராட் கோலியையும் இந்த ஆஸி. ஊடகம் கிண்டல் செய்ததும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.