டிஎஸ்பி ரிச்சா கோஷ்..! உலகக் கோப்பையை வென்றதற்கு மமதா பானர்ஜியின் பரிசு!
உலகக் கோப்பையை வென்ற வீராங்கனைக்கு வழங்கப்பட்ட பதவி குறித்து...
Updated On : 9 நவம்பர், 2025 at 11:51 AM
உலகக் கோப்பையை வென்ற வீராங்கனை ரிச்சா கோஷுக்கு மேற்கு வங்க முதல்வர் டிஎஸ்பி பதவியை வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்திய மகளிரணி முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
Updated On : 9 நவம்பர், 2025 at 11:56 AM
இந்த அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீராங்கனைக்கும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் பரிசுத் தொகையை அறிவித்து வருகிறார்கள்.
Advertisement
இதன்படி இந்திய மகளிரணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டிஎஸ்பி பட்டத்தை வழங்கியுள்ளார்.
மேலும், இதனுடன் ரூ.34 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இந்தப் பதவியை வழங்கும்போது முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, முன்னாள் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி உடன் இருந்தார்கள்.
summary