தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு, ஆஸி. டி20 தொடருக்கான இம்பாக்ட் வீரர் என்ற விருது கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு போட்டிகள் மழையினால் கைவிடப்பட்ட நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என வென்றது.
இந்தத் தொடரில் வாஷிங்டன் சுந்தர் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மிக நேர்த்தியாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுதர முக்கியமான காரணமாக இருந்தார்.
மூன்றாவது டி20-யில் 23 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். நான்காவது போட்டியில் ஐந்து பந்துகளில் 3 விக்கெட்டினை எடுத்து அசத்தினார்.
பிசிசிஐ இது குறித்து விடியோ வெளியிட்டுள்ளது. அதில், பிசிசிஐ-யின் மேலாளர் இந்த விருதினை அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.